முகாம், முகாம் என கூறவேண்டாம் தமிழர்களே…! உலகின் மிக பெரிய சிறை!!


lankarefugee432முகாம் முகாம் என கூறவேண்டாம் தமிழர்களே…!

பத்திரிக்கைகளிலும் மற்றும் எல்லோரும் கூறும்படி இராணுவமுகாம், அகதிகள் முகாம்… என்று கூறுவதை நிறுத்த வேண்டும்,

அவர்களை எப்பொழுது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், கூட்டி போகலாம், கொன்னு போடலாம்!

அவர்களை விடுவிக்கும் வரை அவர்கள் எங்கும் போக கூடாது என்றால், அதற்கு கைது செய்து வைத்திருப்பதாகத்தானே அர்த்தம்?

இது 2.5 இலட்சம் பேர் இருக்கும் திறந்தவெளி சிறை! உலகத்தில் ஹிட்லரின் வதை முகாம்? வதை சிறைக்கு அடுத்த படியான பெரிய வதை சிறை இதுவாகத்தான் இருக்கும்!

குழந்தைகளை பெற்றோருடன் சேர்க்க வேண்டும், அதுதான் முக்கியமான பணி என்கிறார் பத்மநாபன்,  கொலைகார பேரினவாத சிங்கள அரசை 2.5 இலட்சம் மக்களை விடுதலை செய்ய சொல்லி போராட்டத்தை தொடங்குங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களே!

கவனமாக வாசகங்களை கையாளுங்கள் … இனிமேல்…

1.முகாம் என்று கூறக்கூடாது.

2. மீள் குடியேற்றம் என்று கூறாமல், விடுதலை என்று கூறுவோம், அதுதானே உண்மை?

3. உலகின் ஆகப்பெரிய சிறைச்சாலைக்கு கின்னஸ்-ல் இடம் கேட்போம், வரலாற்றில் தமிழர்களின் அவலத்தை பதிவு செய்வோம்.

3. ‘அடைத்து வைக்கபட்டிருக்கும்’  மற்றும் ‘தங்க வைக்கபட்டிருக்கும்’ என்ற வார்த்தைகளை தவிர்த்து கைது செய்து ‘திறந்த வெளி சிறைகளில்’ வைக்கபட்டிருக்கும் என்று வார்த்தைகளை கவனமுடன் பிரயோகிக்க வேண்டும்.

4. எல்லா சர்வதேச நாடுகளையும் கப்பல்களை அனுப்பி அவர்களை விடுவித்து அழைத்து வர, போராட வேண்டும். (இது நடப்பதில் சிரமங்கள் இருந்தாலும், நிலைமையின் விபரீத்தை உணர்த்த உதவும்.)

5. உண்மையில் சர்வதேச நாடுகள் மற்றும் அந்த பொதுமக்கள் அங்கு நடக்கும் உண்மையும், விபரீதங்களும் உணராதவர்களாகவே இருக்கின்றனர். பொது மக்களுக்கு உணர்த்த பட்டால் வியத்தகு நன்மைகள் சர்வதேச அரசியலை மீறி ஈழத்திற்கு ஏற்படும்.

Advertisements

7 Responses to முகாம், முகாம் என கூறவேண்டாம் தமிழர்களே…! உலகின் மிக பெரிய சிறை!!

 1. பதி says:

  உண்மை….

  • Manivannan says:

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பதி! 😉

 2. ஸ்ரீதர் says:

  இந்த விஷயத்தில் தற்போதைய அரசாங்கம் எதுவும் செய்யப் போவதில்லை என்பது என் கருத்து.

 3. நல்ல கருத்துகள். நடந்தால் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் கூறியவற்றில் உள்ள வார்த்தைகளை நானும் தவிர்க்கிறேன்.

 4. Priya says:

  =)) .. இத எந்த வடிவத்தில எப்டி எடுத்து சொன்னாலும்.. உறைக்காதுப்பா.. அங்க போய் உக்காந்து பார்த்தா தெரியும்..! முகாம்ல சித்ரவதை.. கொலை.. வேற என்ன என்ன கொடுமை எல்லாம்.. சொல்ல முடியாது!

  உலகத்தோட பார்வைல.. அரசாங்கம் அவங்கள பராமரிச்சுக்கிட்டு இருக்காங்கன்னு ஒரு தோற்றம்..! ஒரு குழந்தைக்கு காஞ்சி வாங்கணும்னா கூட.. அவங்க பாக்கெட்ல இருந்து (இருந்தா) கொடுத்தாதான் உண்டு..! ஹிட்லர் எல்லாம் ஒண்ணுமே இல்லைங்க.. 🙂

 5. Priya says:

  கஞ்சி…! *

  • Manivannan says:

   ஆமாம், பிரியா …! இலங்கை அழிய போவது உறுதி! அழிவை தவிர வேறு வழிகள் இல்லை அவர்களுக்கு!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: