நமது கலாச்சார பிழை….? (நாகூர் அல்வா-1)

May 31, 2009

தமிழ்நாட்டில் அடைமொழிகள் இல்லாதவர்கள் மிகவும் குறைவு, அரசியல்வாதிகள் ஆகட்டும் உநடிகர்கள், இயக்குநர்கள், பேச்சாளர்கள்… இப்படி நிறைய …

(உ.ம், கலைஞர், அஞ்சாநெஞ்சன், இளையதளபதி….)

வடக்கே இதெல்லாம் இல்லை, இல்லை அதிகமாக இல்லை…

அதே போல் அன்னை சோனியா, கமல்சார், ரஜினிசார்…. எகப்பட்ட மரியாதைகள்….

அவர்கள் சோனியாஜி, அத்வானிஜி என்பதோடு முடித்து கொள்கிறார்கள்! கால் மேல் கால் போட்டுதான் உட்காருகிறார்கள் எவ்வளவு பெரிய ஆளோடு அமர்ந்திருந்தாலும்….

தமிழனின் ரத்ததில் இன்னும் அடிமைத்தனம் உள்ளது, எப்பொழுது திருந்துவார்கள்,

ஜெயலலிதா முன்னால் ஏன் இவ்வளவு பம்மல்ஸ்,

கலைஞர் இந்த விஷயத்தில் பரவாயில்லை, பேரன் ஜெயா மாதிரியாம்…

தமிழ்நாட்டில் இப்பொழுது ஈ.வெ.ராமசாமி  (பெரியாராம்? இதை அவர் ஏன் எதிர்க்கவில்லை?) இருந்திருந்தால் ….? சொல்ல முடியாது ஜெயா வுடன் மகனுக்காகவோ அல்லது பேரனுக்காகவோ  கூட்டுசேர்ந்திருப்பாரோ?Periyar1973

Advertisements

இந்த நாளுக்குத்தானே இவ்ளோ…!

May 29, 2009

Vaiko with LTTE-7mgr-actormkstalin

தளபதிக்கு வாழ்த்துக்கள்!

இந்த நாளுக்குத்தானே இவ்ளோ போராட்டம் ஒரு எம்.ஜி.ராமச்சந்திரன்+13 வருட வனவாசம், இன்றும் இருக்கும் அதிமுக உதயம், ஒரு வை.கோ…. அப்பா, திமுக இந்த நாளுக்காக கொடுத்த விலைதான் எத்தனை….

ndtv-யில், கருணாநிதியின் குடும்ப திட்டம் என்ற தலைப்பில் விவாதித்து கொண்டிருக்கிறார்கள்!

இப்படி ஒரு குடும்பம் வாய்த்த நாம் (தமிழர்கள்) அதிர்ஷ்டசாலிகள்!
வாழ்த்துக்கள், நினைத்ததை முடிப்பவன் படத்தில் கருணாநிதியே கதாநாயகன்!


தேவை, விபச்சாரமும்-நீலப்படங்களும்…! (18+)

May 29, 2009

இது காமம் இல்லை! கருமம்!! கருமம்!!! _ இனியவன்

இந்த தலைப்பில் ஆந்திராவில் என்று நினைக்கிறேன், மேடையில் பெண்கள் வக்கிரமாக ஆடியதை 1000 ஆண்கள் பார்த்ததை பற்றியும் வருத்தபட்டு கூறியிருக்கிறார் …

kama-sutra-erotic-statuesஇது போன்ற வக்ரங்கள் குறைய வேண்டுமென்றால்…
விபச்சாரத்தை சட்டபடி அனுமதிக்க வேண்டும், இது அந்த பெண்களுக்கும் பாதுகாப்பை தரும்.

நமது நாட்டில் ஆணுக்கு திருமணம் என்றால் 32 வயது ஆகிவிடுகிறது, அதுவரையில் கிட்டதட்ட 15 வருட இளமையை அவன் தொலைத்து கண்ணியம் காக்க வேண்டும் என்றால்… வக்கிரம் இங்கேதான் தொடங்குகிறது…
நீல படங்களை அனுமதிக்க வேண்டும், அப்பொழுதுதான் ‘U’ திரைப்படங்களில் வரும் ஆபாசங்களை கண்டு முகம் சுளிப்பார்கள், நல்ல படங்கள் வர ஆரம்பிக்கும், அதெதற்கு என்று முறையான வழிகள் இருக்க வேண்டும், அப்பொழுது எல்லாம் சரியாக இருக்கும்,

நமது சமூகம் போலியானது, பிரம்மச்சாரிகள் என்று யாரும் வாழ முடியாது, இல்லை அவர்கள் பாலுறவையே மறக்க வேண்டும், இதுதானே நமது சட்டம்?
இந்தியர்கள் கண்ணியமானவர்கள் என்பதற்கு எடுத்துகாட்டு, பெண்கள் மீதான பாலியல் வன்முறை கம்மியாக உள்ளது ஆச்சர்யம், இண்ணும் அதிகமாணால்?

பெண்கள் வேலைக்கு பேருந்தில் இடிபடாமல், அலுவலகத்தில் பாலியல் தொந்தரவுகள் இல்லாமல் வாழ வழி, தேவை சட்டபடியான விபச்சாரம்!

சட்டபடியான நீல படங்கள்!   ( இண்டர்நெட் நன்கு பரவிவிட்டால் இதற்கு அவசியம் இராது! )

மேற்கண்டவை நடந்து விட்டால்,

நிச்சயம் குடும்ப பெண்கள் பாதுகாப்புடன் எந்த நேரத்திலும் உலவ முடியும்!

ஆண்கள் பெண்களிடம் இண்ணும் அதிக கண்ணியத்துடன் நடந்து கொள்வார்கள்…!!

இனியவனின் பதிவு

http://www.youtube.com/watch?v=HZ3MCo4ZIOY&eurl=http%3A%2F%2Fwww.bollywoodsargam.com%2Fvideo_todayfeaturedvideo.php%3Fblockbustermovieclip%3DHZ3MCo4ZIOY—latest-sinhala_buddhist_pro&feature=player_embeddedsing pros


இதை படிக்காதவர்களுக்கு…! ;)

May 26, 2009

ramadoss

அடிக்கடி கூட்டனி மாறுவதால் தான் பம்முக தோற்றது என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்த கோமதாஸ் – வாக்காளர்களும் தான் அடிக்கடி ஓட்டுகளை மாறி மாறி போடுகின்றனர். ஆனால் அதை யாரும் பெரிதுபடுத்துவதில்லை எனவும், இதற்காக நாங்கள் அவர்களை தண்டிக்க முடியுமா அல்லது கிண்டல் செய்ய முடியுமா? என ஆவேசமாக கேட்டுள்ளாராம். ”

இந்நேரம் பொன்ஸாமி

(இந்நேரம்.com ல் வந்தது, யாம் பெற்ற இனபம்,….)


பிரபாகரனின் தோல்வியை ‘ஈழதமிழர்கள்’ ஒப்புகொள்ள வேண்டும்!

May 22, 2009

வணக்கம்,
பிரபாகரனின் தோல்வியை ஈழதமிழர்கள் ஒப்புகொள்ள வேண்டும்.
பரவச நிலையிலிருந்து வெளிப்பட வேண்டும்! கண்ணை அகல விரித்து உலக நிலையை உணருங்கள். காலா காலத்துக்கும் உணர்ச்சிவசபட்டு கொண்டே வீணாக வேண்டாம்!
அதிலிருந்து பாடம் கற்று கொண்டால்தான், போராட்டத்தை அடுத்து எடுத்து செல்ல முடியும்!
பிரபாகரன் சகாப்தம் முடிந்துவிட்டது. அவருக்கு ஒரு வீர வணக்கத்தை வைத்து விட்டு புணர் நிர்மான வேலைகளை கவனிக்க வேண்டும், அதிகாரபகிர்வு குறித்து அமெரிக்க அதிபர் பேசிகொண்டு வருகிறார், அதை இலங்கையிலிருந்து வலியுறுத்த எந்த தலையும் இல்லை! (இது பிரபாகரனின் சாதனை!)


தேன்நிலவு முடிந்துவிட்டது! கரு கலைப்புதான் பாக்கி!

May 22, 2009

தேன்நிலவு முடிந்துவிட்டது! கரு கலைவதுதான் பாக்கி!
இதோடு இந்த சரித்திர பிரசத்தி பெற்ற அரசியல் கூட்டணி முடிந்து விட்டால் நன்றாக இருக்கும்.
இப்பொழுது சட்டமன்ற தேர்தல் வந்தால் அதிலும் வெற்றிபெறும் கனவோடு திமுக இருக்கும்.
தொடர்ந்த நன்மைகள் உண்டு தமிழ்நாட்டுக்கு, பார்ப்போம்.

( காங்கிரஸுக்கு ஆணாலும் கல்லு மனசு, 2 பிள்ளை வைத்திருக்கிற சோனியா கொஞ்சமாவது நெனச்சிபாக்க வேனா…, இவ்ளோ பிள்ளங்க வச்சிருந்தாலும் அத்தனை பேருக்குமா நம்ம தல கேட்டாரு?
1 மகன், 1 மகள் ஒரே 1 பேரன், 3 கேபினட் கொடுக்க கூடாதா, பாவி சோனியாவ தமிழ் குடும்ப வயித்தெரிச்சல் சும்மா உடுமா? ஆட்சி பாதியிலேயே கலைஞ்சு போக…..! )


இந்தியாவை கோபாலபுரத்திலேரந்து ஆள முடியாதா, ஐயகோ!

May 21, 2009

இந்தியாவை கோபாலபுரத்திலேரந்து ஆள முடியாதா, ஐயகோ! கலைஞரின் வழிகாட்டுதல் இல்லாமல் இனிமேல் இந்தியா என்ன செய்யுமோ? எழவெடுத்த ஈழப்போரும் இல்லையே? ஈழ தமிழனுக்காக அமைச்சர் பதவியை இழந்தோம் என்றும் கலாய்க்க முடியாது, தமிழகத்தில் பங்கு கேட்டால்? ஆஹா…. என்னே இறைவனின் திருவிளையாடல்…? மிகவும் சந்தோஷம்!
உடன்பிறப்பே… உனக்கு….? cheers!