உத்தம தமிழன்… அய்யா!


8.7.01 அன்று ராமதாஸ் ஒரு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டி வருமாறு;
தேர்தலுக்கு முன்பு எனது ஆதரவு வேண்டிய அந்த அம்மையார், அப்போது நடந்துகொண்ட விதம் கண்டு, நானே அவரை வாய்நிறைய அன்புச் சகோதரி என அழைக்க ஆரம்பித்தேன். அதே அம்மையார் தேர்தல் முடிந்ததும் நடந்துகொண்ட விதத்தை எப்படி விவரிப்பது? அந்த அவமானங்களை நாகரிகமாகவே பட்டியல் போடுகிறேன்.

“பதவியேற்பு விழாவிற்கு எனக்கு மிக தாமதமாக தகவல் தந்தார். அவசரமாக கிளம்பினேன். 7 மணிக்குதான் சென்னை சேர முடிந்தது. பதவிப் பிரமாணம் முடிந்து கோட்டையில் இருப்பதாக தகவல் வந்தது. சரி, வீட்டுக்கு போய் வாழ்த்தலாம் என்று பூச்செண்டு வாங்கி என் மகள் வீட்டில் காத்திருந்தேன். தொடர்ந்து போயஸ் கார்டனுக்கு போன் செய்தேன். எந்த பதிலும் இல்லை. பூச்செண்டு வாட, அடுத்த நாளும் பூச்செண்டு வாங்கி வைத்து மீண்டும் போன் போட தொடங்கினேன். அடுத்த பூச்செண்டும் வாடிப்போக நான் திண்டிவனம் கிளம்பிவிட்டேன்.

அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிற்கு அவரே போன் செய்து அழைத்ததால் சென்றேன். ராஜ்பவனில் விழா முடிந்தது. முதலம‌ை‌ச்ச‌ர் அழைப்பதாக அவரது செயலர் ஒரு அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு ஆளுநர் ஃபாத்திமா பீவியும், முதல்வரும் அமர்ந்திருந்தார்கள். அறையில் வேறு சேர் இல்லை. என்னை பார்த்தவுடன் ஆளுநர் ஊழியர்களை அழைத்து நாற்காலி கொண்டுவர கூறினார். ஆனால் அம்மையார் முகத்தை திருப்பிக்கொண்டார். மிகுந்த வேதனையுடன் வாழ்த்துக்கள் என்று வாயளவில் சொல்லி விட்டு வந்துவிட்டேன்.
“எனக்கு நேர்ந்த அவமானங்களை பற்றி நேருக்கு நேராக சொல்லி நியாயம் கேட்க நேரம் கேட்டேன். ஒரு வாரத்துக்குப் பிறகு கோட்டையில் சந்திப்பதாக சொன்னார். கோட்டையில் கால் வைப்பதில்லை என்ற சபதத்தை முறித்துக்கொண்டு அங்கு சென்றேன். அம்மையாரின் அலுவலக அறையை ஒட்டி ஒரு சாதாரண அறையில் அமர வைக்கப்பட்டேன். ஒரு மணி நேரம் கழித்து தனது அறைக்கு அழைத்தார். தான் முதல்வர் என்ற மமதையால், நாற்காலியில் அமர்ந்தபடி என்னை சந்தித்தார். என் பேச்சை சுருக்கமாக முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டேன்.

“கருணாநிதியுடன் நான் பேச நினைக்கும் போதெல்லாம் விஷயம் கேள்விப்பட்டதும் கவுரவம் பார்க்காமல் அவரே லைனில் வந்து பேசுவார். எனது சவுகரியத்தை கேட்டு நேரம் ஒதுக்குவார். அந்த நாகரிகம் தெரியாத ஒரு மனுசியோடு இனியும் அரசியல் பண்ண எந்த தன்மான தலைவனும் முன்வரமாட்டார்.
“இப்போது தெரிந்து கொள்ளுங்கள் யாருக்கு விரக்தி? யாருக்கு கோபம்? என்பதை. நாகரிகம் தெரியாத மனுசியோடு அரசியல் பண்ண தன்மானம் உள்ளவன் முன்வர மாட்டார் என்று பேட்டி கொடுத்த ராமதாஸ் தற்போது எங்கே போயிருக்கிறார்?

– கலைஞர் இதை வெளியிட்டிருக்கிறார்!

– பொதுக்குழுவில் ஓட்டுபெட்டி வைத்து, எவன் கூட்டணியில சேரலாம்? எவன் கூட வேணாலும் சேரலாம்..! ஆஹா ஆஆஹா…. என்ன ஒரு சனநாயகம்….? இந்தியாவில இருக்கிற எல்லா கட்சியும் பிச்சை எடுக்கணும்யா அய்யா கிட்ட…! பா.ம.க வுக்கு நிகர் உண்டோ….?!

தேர்தல் முடிந்ததும் சகோதரி கொடுக்கபோகும் (சரியான!) மரியாதை தெரிந்தும் தானைதலைவன் மானத்தை அடகு வைக்கிறான், எதற்காக…? அன்பு மணிக்கு மாநிலங்களவை கிடைப்பதற்காகவா? வெற்றி பெற்று  மக்களுக்கு உழைக்க தானே இவ்வளவு பாடும்…!

எனவே, வாக்காள பெருமக்களே, மாணம், மரியாதை பார்க்காமல் மக்களுக்காக பணியாற்ற துடிக்கும் அய்யா கட்சிக்கு ஆதரவு தாரீர்…..!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: