ஒரு பதிவு …!

March 30, 2009

எனது முந்தைய பதிவு ஏனோ தமிழ்மனத்தால் நிராகரிக்கபட்டது.!

Advertisements

உத்தம தமிழன்… அய்யா!

March 30, 2009

8.7.01 அன்று ராமதாஸ் ஒரு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டி வருமாறு;
தேர்தலுக்கு முன்பு எனது ஆதரவு வேண்டிய அந்த அம்மையார், அப்போது நடந்துகொண்ட விதம் கண்டு, நானே அவரை வாய்நிறைய அன்புச் சகோதரி என அழைக்க ஆரம்பித்தேன். அதே அம்மையார் தேர்தல் முடிந்ததும் நடந்துகொண்ட விதத்தை எப்படி விவரிப்பது? அந்த அவமானங்களை நாகரிகமாகவே பட்டியல் போடுகிறேன்.

“பதவியேற்பு விழாவிற்கு எனக்கு மிக தாமதமாக தகவல் தந்தார். அவசரமாக கிளம்பினேன். 7 மணிக்குதான் சென்னை சேர முடிந்தது. பதவிப் பிரமாணம் முடிந்து கோட்டையில் இருப்பதாக தகவல் வந்தது. சரி, வீட்டுக்கு போய் வாழ்த்தலாம் என்று பூச்செண்டு வாங்கி என் மகள் வீட்டில் காத்திருந்தேன். தொடர்ந்து போயஸ் கார்டனுக்கு போன் செய்தேன். எந்த பதிலும் இல்லை. பூச்செண்டு வாட, அடுத்த நாளும் பூச்செண்டு வாங்கி வைத்து மீண்டும் போன் போட தொடங்கினேன். அடுத்த பூச்செண்டும் வாடிப்போக நான் திண்டிவனம் கிளம்பிவிட்டேன்.

அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிற்கு அவரே போன் செய்து அழைத்ததால் சென்றேன். ராஜ்பவனில் விழா முடிந்தது. முதலம‌ை‌ச்ச‌ர் அழைப்பதாக அவரது செயலர் ஒரு அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு ஆளுநர் ஃபாத்திமா பீவியும், முதல்வரும் அமர்ந்திருந்தார்கள். அறையில் வேறு சேர் இல்லை. என்னை பார்த்தவுடன் ஆளுநர் ஊழியர்களை அழைத்து நாற்காலி கொண்டுவர கூறினார். ஆனால் அம்மையார் முகத்தை திருப்பிக்கொண்டார். மிகுந்த வேதனையுடன் வாழ்த்துக்கள் என்று வாயளவில் சொல்லி விட்டு வந்துவிட்டேன்.
“எனக்கு நேர்ந்த அவமானங்களை பற்றி நேருக்கு நேராக சொல்லி நியாயம் கேட்க நேரம் கேட்டேன். ஒரு வாரத்துக்குப் பிறகு கோட்டையில் சந்திப்பதாக சொன்னார். கோட்டையில் கால் வைப்பதில்லை என்ற சபதத்தை முறித்துக்கொண்டு அங்கு சென்றேன். அம்மையாரின் அலுவலக அறையை ஒட்டி ஒரு சாதாரண அறையில் அமர வைக்கப்பட்டேன். ஒரு மணி நேரம் கழித்து தனது அறைக்கு அழைத்தார். தான் முதல்வர் என்ற மமதையால், நாற்காலியில் அமர்ந்தபடி என்னை சந்தித்தார். என் பேச்சை சுருக்கமாக முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டேன்.

“கருணாநிதியுடன் நான் பேச நினைக்கும் போதெல்லாம் விஷயம் கேள்விப்பட்டதும் கவுரவம் பார்க்காமல் அவரே லைனில் வந்து பேசுவார். எனது சவுகரியத்தை கேட்டு நேரம் ஒதுக்குவார். அந்த நாகரிகம் தெரியாத ஒரு மனுசியோடு இனியும் அரசியல் பண்ண எந்த தன்மான தலைவனும் முன்வரமாட்டார்.
“இப்போது தெரிந்து கொள்ளுங்கள் யாருக்கு விரக்தி? யாருக்கு கோபம்? என்பதை. நாகரிகம் தெரியாத மனுசியோடு அரசியல் பண்ண தன்மானம் உள்ளவன் முன்வர மாட்டார் என்று பேட்டி கொடுத்த ராமதாஸ் தற்போது எங்கே போயிருக்கிறார்?

– கலைஞர் இதை வெளியிட்டிருக்கிறார்!

– பொதுக்குழுவில் ஓட்டுபெட்டி வைத்து, எவன் கூட்டணியில சேரலாம்? எவன் கூட வேணாலும் சேரலாம்..! ஆஹா ஆஆஹா…. என்ன ஒரு சனநாயகம்….? இந்தியாவில இருக்கிற எல்லா கட்சியும் பிச்சை எடுக்கணும்யா அய்யா கிட்ட…! பா.ம.க வுக்கு நிகர் உண்டோ….?!

தேர்தல் முடிந்ததும் சகோதரி கொடுக்கபோகும் (சரியான!) மரியாதை தெரிந்தும் தானைதலைவன் மானத்தை அடகு வைக்கிறான், எதற்காக…? அன்பு மணிக்கு மாநிலங்களவை கிடைப்பதற்காகவா? வெற்றி பெற்று  மக்களுக்கு உழைக்க தானே இவ்வளவு பாடும்…!

எனவே, வாக்காள பெருமக்களே, மாணம், மரியாதை பார்க்காமல் மக்களுக்காக பணியாற்ற துடிக்கும் அய்யா கட்சிக்கு ஆதரவு தாரீர்…..!


சோனியா வாழ்க! இந்தியா, இத்தாலி வாழ்க வாழ்க…!!

March 26, 2009

கடந்த 21ஆம் தேதி யூரி பகுதியில் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 3 மணி வரை இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு அரண்களின் மீது பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

1,500 முதல் 2,000 குண்டுகள் இந்திய எல்லைப் பகுதியை நோக்கி பாகிஸ்தான் இராணுவம் சுட்டது. இதில் இந்திய இராணுவ சிப்பாய் பிரகாஷ் சிங் காயமுற்றார்.

எப்போதெல்லாம் எல்லைக்கு அப்பாலிருந்து தீவிரவாதிகள் ஊடுவுகின்றனரோ அப்போதெல்லாம் இப்படி இந்திய எல்லைப் பகுதியில் உள்ள பாதுகாப்பு அரண்களின் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தும். துப்பாக்கி, பீரங்கித் தாக்குதல் நடைபெறும் நேரத்தில் இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊடுறுவல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலே உள்ளது செய்தி, எவ்வளவு திமிர் இந்த பாகிஸ்தானுக்கு, நம்ம அரசியல்வாதிகளையும், மீடியா காரங்களையும் சொல்லணும்! பொறுப்பற்றவர்கள்!! நிச்சயம் நிறைய ‘கசாப்’ கள் வந்திருப்பார்கள்! தேர்தல் சமயத்தில் என்னென்ன நடக்க போகிறதோ!  சோனியா வாழ்க! இந்தியா, இத்தாலி வாழ்க!நல்ல அப்பா கலைஞரா? ஐயாவா…? (5 இடத்துக்குள்ள பேரம் படிஞ்சா நல்லா இருக்கும்!)

March 25, 2009

ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு வியாழனன்று மாலை 5 மணியளவில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக மற்றும் பாமக கட்சிகளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

5 இடத்துக்குள்ள பேரம் படிஞ்சா நல்லா இருக்கும்!

ஜெ கிட்ட தொகுதியெல்லாம் கேட்க முடியாது, கொடுக்கறதுதான்,(ஒரு அல்ப சந்தோசந்தான்!)

தேர்தல் முடிஞ்ச பிறகு காங்கிரஸ் கால்ல விழுந்து மறுபடியும் மகனுக்கு மந்திரி பதவி வாங்கிடுவார் அன்புமணியோட அப்பா…!

( நல்ல அப்பா கலைஞரா? ஐயாவா…? பாப்பையா ஐயா வாங்க ஐயா, நல்ல தலைப்பு மாட்டிகிடுச்சில்ல….)

நாளைக்கு தெரியும்!


3 விதவைகள் சோனியா முகத்தில் தூக்கி எறிந்த விருதுகளுக்கப்புறமும்…!

March 24, 2009

நாட்டில் வேறூன்றியுள்ள பயங்கரவாதத்தை (நம்ம நாட்டில வேறூன்றியிருக்கா? 40 வருடமா காங்கிரஸ்தானே இந்தியாவை ஆள்கிறது?!) காங்கிரஸால் மட்டும்தான் வேறறுக்க முடியும்! சோனியா வின் பிரச்சாரம் இது!

அப்சலை இன்னும் எவ்வளவு காலம் கொஞ்சுவார்கள் என்று யாருக்காவது தெரியுமா?

நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த காவலர்களின் 3 விதவைகள் சோனியா முகத்தில் தூக்கி எறிந்த விருதுகளுக்கப்புறமும்,  வாக்கு வங்கி அரசியலை விட முடியாதுதானே?

எதற்காக பயங்கரவாதிகளை எதிர்த்து நமது காவலர்கள் உயிர் துறக்க வேண்டுமோ?


காங்கிரஸுக்கு பீகார்ல ஆப்பு அடிச்ச மாதிரி…

March 24, 2009

காங்கிரஸுக்கு பீகார்ல ஆப்பு அடிச்ச மாதிரி,  இங்கே தமிழ் நாட்டுலேயும் அடிச்சு விட்டுட்டா எவ்ளோ நல்லா இருக்கும்…..! என்ன சொல்றீங்க…?

பாமக மந்திரிமார்கள் இன்றைக்கு பதவியை ராஜினாமா பண்ணுகிறார்களாம், இலங்கை தமிழர்களுக்காக என்று கருணாநிதி பாணியில ஏதாச்சும் சொல்லுவாங்களோ தெரியல… பார்க்கணும்!


இராமதாஸை இந்த முறை எல்லாரும் கழற்றி விட்டு விடுவாங்களோ?

March 24, 2009

ramadosskarunani

இராமதாஸை இந்த முறை எல்லாரும் கழற்றி விட்டு விடுவாங்களோ?

இவ்வளவு தாமதம் இருக்காதே எப்போதும்!

பார்ப்போம், தமிழகத்துக்கு அவ்வளவு சீக்கிரம் எந்த நல்லதும் நடந்து தொலையாது….ம்ம், காத்திருப்போம் அந்த நல்ல செய்திக்கு! 😉